முதல்வருக்கு தாம்பரத்தில் வரவேற்பு
தாம்பரம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவங்கி வைக்க, ரயில் மூலம் சிதம்பரம் செல்ல, தாம்பரம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், ஜூலை 15ம் தேதி முதல், நவம்பர் மாதம் வரை, தமிழகம் முழுதும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, சிதம்பரம் நகராட்சியில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைக்கிறார்.இதற்காக, தாம்பரத்தில் இருந்து, நேற்று மாலை ரயில் மூலம் சிதம்பரம் சென்றார். தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிதம்பரம் சென்ற முதல்வருக்கு, தாம்பரம் ரயில் நிலையத்தில், தி.மு.க.,வினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.