மின்சாரம் பாய்ந்து வெல்டர் பலி
சென்னை, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கொஞ்சன், 44; வெல்டர். போயஸ்கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மதியம் 'வெல்டிங்' பணி செய்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.