உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஜி.ஆர்., நகரில் மீண்டும் பள்ளம் எப்ப தான் விடிவு கிடைக்குமோ?

எம்.ஜி.ஆர்., நகரில் மீண்டும் பள்ளம் எப்ப தான் விடிவு கிடைக்குமோ?

எம்.ஜி.ஆர்., நகர்,கோடம்பாக்கம் மண்டலம் எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதானசாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலையின் கீழ், நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட குழாய்கள் செல்கின்றன. அதில் ஏற்படும் கசிவு உள்ளிட்ட காரணங்களால், அடிக்கடி சாலை உள்வாங்கி மெகா பள்ளம் ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், கழிவு நீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கவும், 2.20 கோடி ரூபாய் மதிப்பில் மாற்று பாதையில் இன்னொரு கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது.ஆனால், முடிவு இன்னும் கிடைத்தபாடில்லை. கடந்த டிச., மாதம் அண்ணா பிரதான சாலையில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே, 5 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக சீரமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் மீள்வதற்குள், அதே இடத்தில்மீண்டும் சாலை நேற்று உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னைக்கு எப்ப தான் விடிவு கிடைக்கும் என, நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள், அங்கலாய்த்தபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி