உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மெட்ரோ ரயில் பணி தளத்தில் ஒயர் திருடியவர்கள் கைது

 மெட்ரோ ரயில் பணி தளத்தில் ஒயர் திருடியவர்கள் கைது

சென்னை: பரங்கிமலையில், மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த, 300 மீட்டர் ஒயரை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மூரிப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார், 31. இவர், ஆலந்துார் பகுதியில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கிண்டி கத்திப்பாரா பகுதியில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளுக்கு வைத்திருந்த, 300 மீட்டர் ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக, பரங்கிமலை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சென்னை பட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன், 23, ஆலந்துாரைச் சேர்ந்த ஹரீஸ், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை