ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
பெரம்பூர், அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கேத்தரின் ஷீபா, 22. வேப்பேரியில் உள்ள தனியார் கல்லுாரி மாணவி.நேற்று காலை, பெரம்பூர் ரயில் லோகோ மற்றும் கேரேஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலின் முன்பகுதியில் சிக்கினார்.சிறிது துாரம் ஓடி ரயில் நின்ற நிலையில், அவரை மீட்டபோது உயிரிழந்தது தெரிந்தது. பெரம்பூர் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.