உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு துடைப்பத்துடன் பெண் ஆவேசம்

புது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு துடைப்பத்துடன் பெண் ஆவேசம்

புழல், புழல் அடுத்த கடப்பா ரோடு சந்தோஷ் நகரில் பி.வி.ஆர்., வணிக வளாகத்தில் புதிதாக 'டாஸ்மாக்' கடையை திறக்கும் பணிகள், தீவிரமாக நடக்கின்றன. இதற்கு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கம்யூ., கட்சியை தொடர்ந்து, நேற்று அ.தி.மு.க., கட்சியினர் மாதவரம் மூர்த்தி தலைமையில் நேற்று கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அப்பகுதி பெண் ஒருவர் துடைப்பத்துடன் வந்து 'டாஸ்மாக்' கடைக்கும், போலீசாருக்கு எதிராகவும் கோஷமிட்டார். சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி, கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். கலைந்து செல்ல மறுத்த ஆர்ப் பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ