உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டட பணியில் மின் விபத்து தொழிலாளி பரிதாப பலி

கட்டட பணியில் மின் விபத்து தொழிலாளி பரிதாப பலி

கொரட்டூர்:கட்டட பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்; மற்றொருவர் காயமடைந்தார். பெரம்பலுார் மாவட்டம், வயலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 57; கட்டுமான தொழிலாளி. இவர், கொரட்டூர், ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த ராஜு, 35, என்பவர் கட்டி வரும் புது வீடு கட்டுமான பணியில், மூன்று மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கட்டடத்திற்கு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக, இரும்பு கம்பிகளை தோள் மீது வைத்து, நேற்று முன்தினம் மாலை துாக்கிச் சென்றார். அப்போது, கட்டடத்தின் அருகே செல்லும் உயரழுத்த மின்கம்பி மீது இரும்பு கம்பிகள் மோதியதில், பாஸ்கரின் உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்தார். உடன் பணிபுரியும் யுவராஜ், 40, என்பவர், பாஸ்கரை மீட்க முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்ததாக தெரிவித்தனர். யுவராஜ், லேசான காயத்திற்கு சிகிச்சை பெற்றார். கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, கட்டடத்தின் உரிமையாளரான ராஜு, மேஸ்திரி விஜயராகவன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். கட்டடத்தைச் சுற்றி தார்ப்பாய் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாததாலேயே இந்த விபத்து நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை