வலி நிவாரண மாத்திரை விற்ற வாலிபர் கைது
வளசரவாக்கம், வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் உள்ள குளக்கரையில், வலி நிவாரண மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் வளசரவாக்கம் போலீசார் அப்பகுதியை கண்காணித்த போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம், வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன.தொடர் விசாரணையில் பிடிபட்ட நபர், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த முத்துமணி, 21, என தெரியவந்தது.அவரிடம் இருந்து, 19 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.