உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் கைது

படப்பை,படப்பை அருகே நாவலுார் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், 20 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, ஒரகடத்தில் இருந்து நாவலுார் குடியிருப்புக்கு நடந்து சென்றார்.அப்போது, அந்த வழியாக வந்த அதே குடியிருப்பில் வசிக்கும் லாரி ஓட்டுநர் காண்டியப்பன், 35, அந்த பெண்ணை தனது பைக்கில் 'லிப்ட்' கொடுத்து ஏற்றிச் சென்றுள்ளார்.நாவலுார் அருகே சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அங்கிருந்து தப்பியோடிய அந்த பெண், மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, வண்டலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காண்டியப்பனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ