உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணின் ஆடையை கிழித்த வாலிபர் சிக்கினார்

பெண்ணின் ஆடையை கிழித்த வாலிபர் சிக்கினார்

கண்ணகி நகர்: பெண்ணின் ஆடையை கிழித்து, தகாத முறையில் நடக்க முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகரை சேர்ந்தவர் அஜய், 22. இவர் மீது, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் கத்தியுடன் சுற்றிய இவர், பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளார். அப்போது, அவரது நடவடிக்கையை தட்டிக்கேட்ட, 25 வயது பெண்ணின் கையை பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, கத்தியால் பெண்ணின் ஆடையை கிழித்து, தகாத முறையில் நடக்க முயன்றார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அவரை பிடித்து நையப்புடைத்து, கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை