உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

செங்குன்றம், சென்னை கொளத்துார், விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த், 23. இவர் செங்குன்றம், காந்தி நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து ராயல் என்பீல்ட் பைக்கில் வீட்டுக்கு சென்றார். புழல் காவாங்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு நிஷாந்த் பலியானார். லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை