மேலும் செய்திகள்
இன்று இனிதாக (14.11.2024) திருவள்ளூர்
14-Nov-2024
ஓட்டேரி, நவ. 22-ஓட்டேரி, நம்மாழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதனின் மகன் தீபக், 21. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அதீத மது போதையில், நம்மாழ்வார்பேட்டை, சுப்புராயன் 3வது தெரு பகுதியில் சிலரை, அநாகரிகமான வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பரத், நந்தா உள்ளிட்ட 10 பேர், தீபக்கை நையப்புடைத்தனர். இதில், மூக்கு, கன்னத்தில் காயமடைந்த தீபக், மருத்துவமனைக்குக் கூட செல்லாமல் நேராக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 12:00 மணிக்கு சென்றார். தன்னை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Nov-2024