மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 1297 வழக்குகள் தீர்வு
09-Mar-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,869 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஐந்து கோடியே, 47 லட்சத்து, 10 ஆயிரத்து, 790ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டது.பொள்ளாச்சி சப் - கோர்ட்டில், பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற்றது.சார்பு நீதிபதி மோகனவள்ளி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஸ்வேதா ரன்யன், பிரகாசம் முன்னிலை வகித்தார்.வக்கீல் சங்கத்தலைவர் துரை, உப தலைவர் பிரபு, இணை செயலாளர் அருள், வக்கீல்கள் முத்துகிருஷ்ணன், பிரவீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், சப் - கோர்ட், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்., 1 மற்றும் 2 கோர்ட்டுகளில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள், செக்மோசடி, உணவு கலப்பட வழக்குகள், மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரான வழக்குகள், ஜீவானம்சம் வழக்கு, விபத்து காப்பீடு வழக்கு என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.மொத்தம், 3,869 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம், ஐந்து கோடியே, 47 லட்சத்து, 10 ஆயிரத்து, 790 ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக, வட்ட சட்டப்பணிகள் குழுவினர் தெரிவித்தனர். 44.5 லட்சம் இழப்பீடு
ஏ.நாகூர் அருகே கடந்தாண்டு, மே மாதம், 1ம் தேதி சாலை விபத்தில் மரம்பிடுங்கிகவுண்டன்புதுாரை சேர்ந்த சதீஷ்குமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதற்கு, இழப்பீடாக, 44.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீட்டு கழகம் வழங்கியது.
09-Mar-2025