உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளை தடுமாற செய்யும் பாதை

மாற்றுத்திறனாளிகளை தடுமாற செய்யும் பாதை

கோவை: கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்துக்கு செல்லும் பாதையில் பேவர் பிளாக் கற்கள் சரியாக பதிக்கப்படாததால், அவ்வழியாக செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். உதவித்தொகை, செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெறவும், விண்ணப்பிக்கவும் தினமும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். ‘எல்காட்’ அலுவலகத்துக்கு செல்வோரும் இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர். சரியாக பதிக்கப்படாத கற்களால், முதியவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தடுமாறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ