ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு மாணவியர் சேர்க்கை துவக்கம்
கோவை: ராஜவீதி, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2026– 27ம் கல்வியாண்டுக்கான தொடக்கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்புக்கான மாணவியர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். https://scert.tnschools.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், புகைப்படம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் சலுகை கோருவதற்கான சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அவசியம். சேர்க்கை கட்டணம், ரூ.3,500 மற்றும் கல்விக் கட்டணம் ரூ.1,500 மட்டுமே. வரும் 16ம் தேதி நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும். விபரங்களுக்கு, 0422– 2399315 என்ற எண்ணில் அழைக்கலாம்.