| ADDED : ஜூன் 09, 2026 03:40 PM
கோவை: மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. 49 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. பீளமேடு நெல்லை ஸ்டோர் பின்புறம் சாலையை சீர் செய்வது, 68வது வார்டு ஹோஸ்மின் நகர் முதல் ரத்தினபுரி வரை புதிய சென்டர் மீடியன் தெருவிளக்கு அமைப்பது, பவர்ஹவுஸ் பகுதியில் நவீன கழிப்பிடம் அமைப்பது, குனியமுத்தூர் பி.கே.ஜி.கார்டன் பகுதியில் கழிவு நீர் தேக்கத்தை சரி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனுக்கள் அளிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மக்கும், மக்காத கழிவுகளை மூலத்திலேயே பிரித்து சேகரிக்கும் பச்சை –- நீல இருவாளி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மனு வழங்கப்பட்டது. இந்த மனுக்கள் மட்டுமல்லாமல், மாநகராட்சி சார்ந்த எந்த பிரச்னையாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சரி செய்ய தயார், என்று கமிஷனர் ரவி தேஜா கூறினார்.