மேலும் செய்திகள்
63 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
17-Aug-2024
கோவை : கோவையில், கடந்த ஆக., மாதத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட 281 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்திரி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆக., மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், எடையளவு சார்ந்து 30 முரண்பாடுகளும், கூடுதல் விலைக்கு விற்பனை, பொட்டலமிடுவதற்கு உரிய சான்று பெறாதது உள்ளிட்டவை சார்ந்து, 7 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டன.மேலும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மீறிய கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 244 நிறுவனங்கள் என மொத்தம் 281 நிறுவனங்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் 4 பேரை, அபாயகரமான பணியில் அமர்த்திய 3 நிறுவனங்களுக்கு, விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-Aug-2024