உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘வெளிமாநில தொழிலாளர்களை ஆவணமின்றி பணியமர்த்தாதீங்க’

‘வெளிமாநில தொழிலாளர்களை ஆவணமின்றி பணியமர்த்தாதீங்க’

வால்பாறை: வால்பாறையில் தேயிலை எஸ்டேட்களில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலத்தவர்களை பணியில் அமர்த்துகின்றனர். ஆனால் அவர்களிடம் எஸ்டேட் நிர்வாகங்கள் எவ்வித ஆவணங்களும் பெறுவதில்லை. போலீசார் கூறியதாவது: வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் அசாம், மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை பணியில் அமர்த்துவதற்கு முன், உரிய ஆவணங்களை பெற்று, அவற்றின் நகலை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வழங்க வேண்டும். ஆனால், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு, சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை