உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால், ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வேத பாராயணம் சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தரர்கள், கோவில் செயல் அலுவலர் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி