உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவுண்டரி ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி. விலக்களிக்க வேண்டுகோள்

பவுண்டரி ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி. விலக்களிக்க வேண்டுகோள்

கோவை, செப்.26- கொடிசியா சங்க தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் டில்லி சென்றனர். மத்திய எம்.எஸ்.எம்.இ துறை செயலர் ரஜ்னீஷ் மற்றும் இணை செயலர் மெர்ஜி ஆகியோரைசந்தித்தனர். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தொழிலை எளிதாக செய்ய பல்வேறு கோரிக்கை வைத்தனர். இதேபோல மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் துறை சஞ்சய் மங்கலையும் சந்தித்தனர்.  அவர்கள் அளித்த மனுவில், ஜி.எஸ்.டி நடைமுறையால் பல சவால்களை சந்திக்கிறோம். இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட பவுண்டரி நிறுவனங்கள் உள்ளன. உற்பத்தியாகும் காஸ்டிங் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதற்கு பயன்படுத்தும் டைஸ், மோல்டு உள்ளிட்ட பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி உள்ளது. அதை வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வேண்டியுள்ளது.  அதனால் விலையில் சேர்க்கிறோம். சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நம் போட்டி நாடுகளில் பவுண்டரி பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது. நமக்கு வரி விலக்கு இல்லாததால் போட்டித்திறன் பாதிக்கிறது. வாட் முறையில் 5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி மட்டுமே இருந்தது. தற்போதைய வரியால் சுமை ஏற்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் காஸ்டிங் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி