உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் ஆம்புலன்ஸ் திருட்டு; இருவர் கைது

இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் ஆம்புலன்ஸ் திருட்டு; இருவர் கைது

கோவை:இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் ஆம்புலன்சை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்தவர் சங்கர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான இவர், 16 ஆம்புலன்சுகளை இயக்கி வருகிறார். அதன் மேலாளராக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கண்ணன், 33, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதில் ஒரு கார் ஆம்புலன்சை, சவுந்தரராஜன் என்பவர் ஓட்டி வந்தார்.நேற்று முன்தினம் காலை, சவுந்தரராஜன் ஆம்புலன்சை கோவை அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி, சாவியை இருக்கையில் வைத்து ஓய்வு எடுக்கச் என்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, ஆம்புலன்ஸ் மாயமாகி இருந்தது.அதிர்ச்சி அடைந்த சவுந்தரராஜன், அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அவர், மேலாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஆம்புலன்ஸ் திருடர்களை தேடி வந்தனர்.அப்போது ஆம்புலன்ஸ், சுங்கம் பைபாஸ் அருகே சென்று கொண்டு இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பகுதியில் இருந்த போலீசார் உதவியுடன், ஆம்புலன்சை மடக்கி பிடித்தனர். இருவர் சிக்கினர்.விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த முத்து, 44, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், 28 என்பது தெரியவந்தது. போலீசார் ஆம்புலன்சை மீட்டு, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ