மேலும் செய்திகள்
இளநீர் விலையில் மாற்றமில்லை
26-Aug-2024
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 15,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த வாரம் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இங்கும் இளநீர் வரத்து, தொடர்ந்து குறைந்து வருகிறது. இளநீரை வாங்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வரக்கூடிய வாரங்களிலும் இளநீரின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. நல்ல தரமான இளநீருக்கு நல்ல விலை கேட்டுப் பெறவும். இவ்வாறு, அவர் கூறினார்.
26-Aug-2024