பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபுரம் முத்துசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. அதில், மழலையர் வகுப்பு மாணவ, மாணவியர், கிருஷ்ணராகவும், ராதையாகவும் வேடமணிந்து அசத்தினர்.மேலும், பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், உறியடி, இசை நாற்காலி போன்ற போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பொருளாளர் பிரியவீனா செந்தில்குமார் பரிசுகளை வழங்கினார்.* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மாரிமுத்து பரிசு வழங்கினார்.பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். பாரம்பரிய நிகழ்வான உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது.* உடுமலை, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் மழலையர் பிரிவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு பூஜை செய்தனர். மழலையரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.* உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மழலையர் பிரிவு மாணவர்கள் கண்ணன், ராதையாக வேடமணிந்து விழாவை கொண்டாடினர். ஆர்.கே.ஆர். கல்வி குழும தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா குழந்தைகளை பாராட்டினர்.