சம்பள பாக்கி பெற்றுத்தர கோரி வடமாநில தொழிலாளர்கள் மனு
கோவை, ; அரசு கட்டுமான பணியில் ஈடுபட்ட, வட மாநில தொழிலாளர்கள் சம்பள பாக்கியை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெற்றுத்தர வேண்டும் என்று, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில், வட மாநில தொழிலாளர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கோவை உக்கடம், பெ.நா.பாளையம் ஆகிய இரு இடங்களில், தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.இதற்கான ஒப்பந்தப்பணிகளை, ஈரோட்டை சேர்ந்த பி.வி.இன்ப்ரா பிராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, அரசு குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்துள்ளது.அதன்படி, கட்டடப் பணிகளில் மேசன் வேலைக்கு நாளொன்றுக்கு, 1,101 ரூபாயு-ம், உதவியாளர் வேலைக்கு 1,031 ரூபாயும் வழங்க வேண்டும்.அதற்கு மாறாக, மேசன் பணிக்கு நாளொன்றுக்கு, 700 ரூபாயும், உதவியாளர் பணிக்கு நாளொன்றுக்கு, 345 ரூபாயும் வழங்கப் பட்டுள்ளது.அதன்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.40,93,394 சம்பளத் தொகையை, சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டரிடம் இருந்து, பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.கட்டடப் பணிகளில் மேசன் வேலைக்கு நாளொன்றுக்கு, 1,101 ரூபாயு-ம், உதவியாளர் வேலைக்கு 1,031 ரூபாயும் வழங்க வேண்டும். அதற்கு மாறாக, மேசன் பணிக்கு நாளொன்றுக்கு, 700 ரூபாயும், உதவியாளர் பணிக்கு நாளொன்றுக்கு, 345 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.