உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே, நேற்று காலையில் முதியவர் ஒருவர் நடந்து வந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்த தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் சமூக சேவகர்கள், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதியவரை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், இறந்து போன முதியவர், கோத்தகிரியை சேர்ந்த முத்து, 65, என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ