‘கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யணும்’
கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது: ஜூன் 28ம் தேதி ஆண்டுதோறும், ஹிந்து சாம்ராஜ்ய விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டும், இந்நிகழ்வு நடத்தப்படும். தி.மு.க., ஆட்சியில், கோவில்கள் பாதிக்கப்பட்டன. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், கோட்ட பொதுசெயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தசரதன் உட்பட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.