உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து

நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து

கோவை;சென்னையில் நடந்த தி.மு.க., கட்சி நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, 'சீனியர் மாணவர்கள் பள்ளியை விட்டு போக மறுக்கின்றனர்' என, மூத்த அரசியல்வாதிகள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு பதிலடியாக, மூத்த நடிகர்கள் பல் விழுந்து, சாகிற நிலையில் நடித்து வருவதாக, தி.மு.க., மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து, கோவையில் சிலரிடம் பேசினோம்...தி.மு.க., கவுன்சிலர் அஸ்லாம் பாஷா:தி.மு.க., கட்சியில் மூத்த தலைவர்கள், இளைஞர்களை விட சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் இளைஞர்களுக்கு வழிவிட்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., கட்சியில் அடுத்து ஆளபோவதும் இளைஞர்கள் தான். அவர் நகைச்சுவையாக கூறியிருந்தாலும், அரசிக்கு வருவதாக கூறி பயந்து சென்றவரின் அரசியல் கருத்து ஏற்று கொள்ள முடியாது.அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன்:ரஜினி கூறியது அவரது வாழ்க்கைக்கே பொருந்தாது. நியாயப்படி அவர் சினிமாவில் இருந்து ரிட்டேட் ஆகி இருக்க வேண்டும். அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு ரிட்டேட்மெண்ட் கிடையாது. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து நல்லது தான். ஆனால் இளைஞர்களை வழி நடத்த மூத்த அரசியல்வாதிகள் வேண்டும். அவரது கருத்து தவறு.பா.ஜ., மாநில செயல் குழு உறுப்பினர் பாஸ்கரன்:ரனிஜி கருத்து ஏற்றுகொள்ள கூடியது. மூத்த அரசியல்வாதிகளே தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறைந்து விடும். இளைஞர்கள் கையில் அரசியல் கிடைத்தால் தான் நாடு முன்னேறும். மூத்த அரசியல் வாதிகள் ஓய்வு பெறுவதற்குள், இளைஞர்களுக்கு வயதாகி விடும்.தொழில் முனைவோர் கதிரேசன்:புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மாற்றம் வரும். எப்போதும், இட்லி அல்லது தோசையே சாப்பிட்டவர்களுக்கு பிற உணவுகளின் சுவை தெரியாது. அதுபோல தான், பழைய கட்சிகள், அரசியல் தலைவர்களின் முறையை மட்டுமே பார்த்து வருகிறோம். தற்போது, சிலர் புதிதாக அரசியலுக்கு வருகின்றனர். நடிகர் விஜய்யின் வருகை பல இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தும்.பயிற்சி ஆசிரியர் செல்வகுமார் :மூத்த அரசியல்வாதிகளுக்கு இப்போது உள்ள தொழில் நுட்பங்கள் தெரியாது. ஏ.ஐ., சமூக வலைதளம் என இளைஞர்கள் உலகையே கையில் அடக்கி வைத்துள்ளனர். புத்தகங்களை மட்டும் படித்த மூத்த அரசியல்வாதிகளுக்கு தொழில் நுட்பத்தை கற்று கொடுக்க இளைஞர்கள் தேவை. அதற்கு இளைஞர்களுக்கு அரசியல் கற்று பொடுத்தால் அரசியலில் பல முன்னேற்றம் ஏற்படும்.தொழில் முனைவோர் ரஞ்சித்:இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்காக, அனுபவம் வாய்ந்தவர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை வயதானவர்கள் எனப் புறம் தள்ளி விடக்கூடாது. அவர்களின் வழிகாட்டலோடு, அடுத்த தலைமுறைக்கு அரசியல் பழக்குவதுதான் சரியானதாக இருக்கும். மூத்தவர்களும் தாங்களாக முன்வந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டி, வளர்த்துவிட வேண்டும்.டிவைர் சுரேந்தர்:இளைஞர்கள் அரசியலுக்கு வர மூத்தவர்களும் வேண்டும். பல மூத்த அரசியல்வாதிகள் தான் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தி உள்ளார்கள். அதே சமயம் தற்போது அரசியலில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு தான் இருக்கிறார்கள். ரஜினி பேசும் போது மூத்தவர்கள் வேண்டாம் என கூறவில்லை. அவர்களின் திறமையை பாராட்டி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ