மேலும் செய்திகள்
தென்னங்கன்று விற்பனை
20-Aug-2024
குளவி கொட்டியதில் 5 பெண்கள் காயம்
13-Aug-2024
ஆனைமலை:ஆனைமலை அருகே, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தென்னை நாற்றுப்பண்ணையில், தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:ஆனைமலை அருகே ஆழியாறில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தென்னை நாற்றுப்பண்ணை செயல்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன.நெட்டை ரக கன்றுகள் ஒன்று, 65 ரூபாய்க்கும், கலப்பின ரகங்கள், 125 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், சிட்டா மற்றும் ஆதார் கார்டுடன் வந்து பெறலாம். மேலும், விபரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, கூறினார்.
20-Aug-2024
13-Aug-2024