மேலும் செய்திகள்
அரசு பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட ஆயத்த கூட்டம்
14-Feb-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள காணியாலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 65வது ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அழகேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அங்குசாமி, 'வானம் வசப்படும்' என்ற தலைப்பில் பேசினார்.பி.டி.ஏ., தலைவர் சிவசாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், எஸ்.எம்.சி., குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், நாட்டுப்புற பாடல்கள், நடனம், யோகா, பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
14-Feb-2025