உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.டி.சி.,யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுந்து

எஸ்.டி.சி.,யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுந்து

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், மலேசியா மணிப்பால் பல்கலை மற்றும் ஜப்பான் ஐடோக்கியோ நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், ஐடோக்கியோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி குமார்பழனிசாமி, கல்லுாரித் தலைவர் சேதுபதி, துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி சார்பில் முதல்வர் வனிதாமணி, மணிப்பால் பல்கலை துணை வேந்தர் பேட்ரிக் கீ பெங்காங், இணை வேந்தர் அடிநேகரா லுட்டிபின் அபாஸ் ஆகியோர் கையெழுத்து இட்டனர். தொடர்ந்து, ஜப்பான் ஐடோக்கியோ நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் வாயிலாக, ஆய்வு மற்றும் வளர்ச்சி, பரஸ்பர ஆசிரியர், மாணவர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்ற வழிவகுக்கும், என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ