உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலக்கடலை விதைக்கு மானியம்

நிலக்கடலை விதைக்கு மானியம்

 கோவை: நிலக்கடலை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை மேலும் அதிகரிக்க , விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தேசிய சமையல் எண்ணெய் வித்துக்கள் இயக்க திட்டத்தில் இந்தாண்டு நிலக்கடலையில் உயர் விளைச்சல் ரகங்களான கிரினார் 4, கிரினார் 5 மற்றும் விஆர்ஐ., 10 போன்ற ரகங்களின் சான்று பெற்ற விதைகள் வேளாண் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது. நிலக்கடலை விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு, 125 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஆனைமலை, அன்னுார், காரமடை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் தொண்டாமுத்துார் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் நிலக்கடலை விதை உள்ளது. நிலக்கடலை செயல் விளக்கத்திடல் அமைக்க 2.5 ஏக்கருக்கு ரூ.14 ஆயிரம் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக, கோவை வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !