அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு ஆதரவு
பொள்ளாச்சி: பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நேற்று துவங்கினார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதே போன்று, நெகமம் மற்றும் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை துவங்கிய இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இயக்கம் சார்ந்த இணைய பக்கத்தில் மக்கள் பலர் இணைந்துள்ளனர்.