உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போட்டுத்தாக்குது வெயில்: மண்பானை நீரால் ஜில்

போட்டுத்தாக்குது வெயில்: மண்பானை நீரால் ஜில்

கோவை: கோவையில் வெயில் சுட்டெரிக்க துவங்கி இருப்பதால், மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள, மண்பானை விற்பனை கடைக்கு வந்து ஏராளமானவர்கள் மண் பானைகளை வாங்கி செல்கின்றனர். இப்போது மண்ணால் தயாரிக்கப்பட்ட வாட்டர் பாட்டில், ஜார், டம்ளர் உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன. 100 முதல் 1800 ரூபாய் வரை மண் மானை பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.மண்பானை விற்பனையாளர் சுந்தராஜ் கூறுகையில், ''கடந்த ஒரு வாரமாகதான், பானை விற்பனை அதிகரித்துள்ளது. பைப் வைத்த தண்ணீர் பானைகளை, அதிகமானவர்கள் வாங்கி செல்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ