உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவல் சண்டை மூவர் கைது 

சேவல் சண்டை மூவர் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்பக்கத்தில் சிலர் சட்ட விரோதமாக சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட கிணத்துக்கடவை சேர்ந்த பிரகாஷ்,29, மாக்கினாம்பட்டியை சேர்ந்த நந்தகுமார், 28, கொண்டேகவுண்டன்பைாளையம் முத்துசாமி, 30, ஊஞ்சவேலாம்பட்டி உதயகுமார்,50, ஆகியோரை சுற்றி வளைத்தனர். அவர்களில், உதயகுமார் தப்பியோடி விட்டார். மற்றவர்களை கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனங்கள், 4ஆயிரம் ரூபாய் பணம், ஒரு சேவலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ