100வது ஒயிலாட்ட அரங்கேற்றம்
அன்னுார்; அன்னுாரில் ஒயிலாட்டத்தின் 100வது அரங்கேற்ற விழா இன்று நடக்கிறது. அன்னுார் வட்டாரத்தில், பல்வேறு கிராமங்களில், ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் கற்பிக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியோர், என பல தரப்பினரும், ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் பயிற்சி பெற்று அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.இதில் சங்கமம் கலைக்குழு சார்பில், 100வது அரங்கேற்ற விழா, அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், ஜீவா நகர், வாத்தியார் தோட்டம் பின்புறம் இன்று (30ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பலர் ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் ஆட உள்ளனர். பொதுமக்கள் கண்டு களிக்க கலைக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.