13வது தேசிய குழந்தைகள் சிறுநீரக சிகிச்சை மாநாடு
கோவை;இந்திய குழந்தை அறுவை சிகிச்சையாளர் சங்கத்தின், குழந்தைகள் சிறுநீரக சிகிச்சை பிரிவின் கீழ், 13வது தேசிய குழந்தைகள் சிறுநீரக சிகிச்சை மாநாடு, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். ரோபோ, லேபரோஸ்கோபிக் மற்றும் பாரம்பரிய திறந்த அறுவை போன்ற பல்வேறு சிறுநீரக அறுவை தொழில்நுட்பங்களை கொண்ட பயிலரங்கு நடத்தப்படுகிறது. முக்கிய அமர்வுகளில், இணையமில்லா பாலியல் வேறுபாட்டு குறைபாடுகள், ஸ்பைனா பிபிடா போன்ற பல்வேறு சிக்கலான நிலைகள் பற்றிய, உரையாடல்கள் இடம்பெறும் என டாக்டர் ராஜாமணி, பாவை ஆகியோர் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிறுநீரக அறுவை சிகிச்சையில், புதிய தரநிலைகளை உருவாக்குவதே மாநாட்டின் நோக்கம். இதன் மூலமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையின் தரம் மேம்படும் என நம்புவதாக, டாக்டர்கள் தர்மேந்திரா மற்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்தனர்.