உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  24 மணி நேர சோதனை சாவடி

 24 மணி நேர சோதனை சாவடி

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே, வெள்ளக்கிணறுவில் குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, 24 மணி நேரமும் இயங்கும் சோதனை சாவடி துவக்கப்பட்டுள்ளது. துடியலூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கூறுகையில், ''இச்சோதனை சாவடி, 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு, ஹெல்மெட் அணிவது, உரிய ஆவணங்களுடன் பயணிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு இந்த சோதனை சாவடி வாயிலாக மேற்கொள்ளப்படும். அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன், அதிக ஒளியை உமிழும் எல்.இ.டி., பல்புகளை பொருத்தியுள்ள வாகனங்களை கண்டறிந்து, உடனடியாக அபராதம் விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். எஸ்.ஐ.,கள் சரவணன், துரை உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை