உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதார் முகாமில் 400 பேர் பயன்

ஆதார் முகாமில் 400 பேர் பயன்

சூலுார்; சூலுாரில் பா.ஜ. இளைஞரணி சார்பில் நடந்த ஆதார் திருத்த முகாமில், 400க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி, சூலுார் பா.ஜ. இளைஞரணி சார்பில், சிறப்பு ஆதார் திருத்த முகாம் கடந்த, நான்கு நாட்களாக நடந்தது. புதிய ஆதார் எடுத்தல், ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளுதல், புதுப்பித்தல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் முகாமில் பயன்பெற்றனர். அஸ்வின், பிரவீன், கவுதம், முகிலன் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தலைவர் ஹரீஷ், மண்டல பொருளாளர் பிரசாந்த் கூறுகையில், 'ஆயுஷ் மான் பாரத் காப்பீடு அட்டை, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான மருத்துவ காப்பீடு அட்டைகளும் முகாமில் வழங்கப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ