உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆளுமை மேம்பாட்டு பயிற்சி 70 கார் ஓட்டுனர்கள் பங்கேற்பு

ஆளுமை மேம்பாட்டு பயிற்சி 70 கார் ஓட்டுனர்கள் பங்கேற்பு

கோவை:உலக சுற்றுலா தினம் செப்., 27ல் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கோவை மாவட்ட நிர்வாகம், 'ஸ்கால்' அமைப்பு சார்பில், சொந்தமாக கார் வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கான ஒரு நாள் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாம், கோவையில் நடந்தது. சொந்தமாக கார் வைத்திருக்கும், 70 ஓட்டுனர்கள் பங்கேற்றனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத்துறை தலைவர் பிந்து, இந்துஸ்தான்கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கேட்டரிங் அறிவியல் மற்றும் ஓட்டல் மேலாண்மைத் துறை தலைவர் பிரேம்கண்ணா ஆகியோர் பயிற்றுவித்தனர். உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, சந்தியா, உதவி பேராசிரியர், அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறை உதவி பேராசிரியர் சந்தியா, சுற்றுலாத்துறை அலுவலர்கள்பங்கேற்றனர். சுற்றுலாத்துறை சார்பாக, அவினாசிலிங்கம் பல்கலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத்துறை, மாணவிகளை கொண்டு, கோவை வ.உ.சி., பூங்காவில் துாய்மை முகாம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை