உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் சிகிச்சை முகாமில் 75 பேருக்கு பரிசோதனை

கண் சிகிச்சை முகாமில் 75 பேருக்கு பரிசோதனை

கோவில்பாளையம்: கண் சிகிச்சை இலவச முகாமில், 75 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அக்ரஹார சாமக்குளத்தில், கே.ஜி., மருத்துவமனை மற்றும் 'கோயம்புத்துார் லேடீஸ் சர்க்கிள் 85' இணைந்து, கண் சிகிச்சை இலவச முகாம் நடத்தப்பட்டது. 75 பேருக்கு, பார்வை குறைபாடு, கண் புரை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் உட்பட குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 18 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 10 பேருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 'லேடிஸ் கிளப் 85' நிர்வாகிகள் கீர்த்தனா ஸ்ரீராம், நீத்து ஹரிராஜன், நிவேதிதா, சவுமியா மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ