உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனிமவளக் கொள்ளை தடுக்க குழு அமைக்க வேண்டும்

கனிமவளக் கொள்ளை தடுக்க குழு அமைக்க வேண்டும்

சூலுார்; ''தமிழகத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,'' என, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கண்ணம்பாளையத்தில் நடந்தது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் சசிக்குமார் கூறுகையில், ''தமிழகத்தில் பெருகி வரும் கனிமவள கொள்ளையை தடுக்க, அரசு தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். குழு அமைக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எங்கள் சங்கம் முழு ஆதரவு அளிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை