முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்
'முழு உடல் பரிசோதனை வாயிலாக, சில நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக நிவாரணம் பெறலாம்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:சில நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முழு உடல் பரிசோதனை உதவுகிறது. பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளோர். நோய் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோர். புகை, மது பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர், ரத்தத்தில் கொழுப்பு, அதிக உடல் பருமன், குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய் இருந்தால் அவர்களின் வாரிசுகள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.உடல் உழைப்பின்றி பணியாற்றும், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதன் வாயிலாக ஆரம்ப நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்கள் மற்றும் பாதிப்புகளை கண்டறியலாம்.பரிசோதனையில் ரத்தம், சிறுநீர், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனை. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ கார்டியோகிராம். பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.இதன் வாயிலாக ரத்தசோகை, ரத்த புற்றுநோய், நீரிழிவு பாதிப்பு, கொலஸ்ட்ரால் அளவு, மாரடைப்பு அறிகுறி, நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், நிமோனியா பாதிப்பு, மார்பக புற்றுநோய், கல்லீரல் இயக்கம், சிறுநீரக செயல்பாடுகளை கண்டறியலாம்.நோய் அறிகுறி கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்ய கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்; சில பரிசோதனைகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.கே.எம்.சி.எச்., முழு உடல் பரிசோதனை மையம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு, தனி நபர், கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கென பிரத்யேக முழு உடல் பரிசோதனை திட்டமும் உள்ளது. முழு உடல் பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தரப்படும்.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.