உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் விழுந்தது மரம்

ரோட்டில் விழுந்தது மரம்

கோவை: மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. நேற்று மதியம் பெய்த மழையால் ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே ரோட்டில் ‘மஞ்சள் பூ’ மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. நல்ல வேளையாக எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !