உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லதாங்கி வித்யா மந்திர் மாணவர்கள் சாதனை

லதாங்கி வித்யா மந்திர் மாணவர்கள் சாதனை

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் வெற்றி பெற்றனர். இதில், மாணவி ஐஸ்வர்யா 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாநில அளவில் நான்காம் இடமும் பெற்றார்.மாணவர் சுருதிக், 495 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், அகல்யா மற்றும் ரித்திஸ், 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும், பிரணாவ் 493 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், 492 மதிப்பெண்களுடன் ஹர்சிதா, நிக்கிதா, தனிக் ஷா, தனு ஸ்ரீ, ஆதவ், மற்றும் மிதுல் குமார் ஆகிய ஆறு மாணவர்கள் ஐந்தாமிடமும் பிடித்தனர்.பள்ளியில், 17 மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 10 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்திலும், 3 மாணவர்கள் ஆங்கிலம், 2 மாணவர்கள் கணிதத்திலும், முழுமதிப்பெண் பெற்று அசத்தினர்.சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளி தாளாளர் சாந்திதேவி, நிர்வாக இயக்குனர் ஸ்ரீரிதன்யா மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர், முதல்வர், பெற்றோர், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !