மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
அன்னுார் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி, செப். 13ல் அவிநாசியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது. பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசுகையில், ''அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி செல்லும் இடங்களில், தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைவது உறுதியாகி விட்டது,'' என்றார். அ.தி.மு.க., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்குமார் பேசுகையில், ''அனைத்து கிராமங்களிலும் சுவர் விளம்பரம் எழுத வேண்டும். வீடு வீடாக அழைப்பிதழ் தர வேண்டும்,'' என்றார். அவிநாசியில் பங்கேற்கும் கூட்டத்தில், 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., செல்வராஜ், வர்த்தக அணி மாநில துணை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், சாய் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
05-Aug-2025