உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்சரம் கல்வி நிறுவனங்கள் திறன் வளர்ப்பதில் முன்னணி

அக்சரம் கல்வி நிறுவனங்கள் திறன் வளர்ப்பதில் முன்னணி

'பெ ரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள அக்சரம் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அக்சரம் வேர்ல்ட் ஸ்கூல், நரசிம்மநாயக்கன்பாளையம் அக்சரம் கிட்ஸ் ஸ்கூல் ஆகியவை மாணவ, மாணவியருக்கு கல்வி வழங்குவதில் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருவதாக,' பள்ளி தாளாளர் சிவக் குமார், செயலாளர் ரமேஷ் கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது: பள்ளியில் இ--வகுப்பறைகள், இயற்கையான சுற்றுச்சூழல், சிறந்த கற்பித்தல் முறை, சிறந்த முன் அனுபவம் மிக்க ஆசிரியர்கள், பாடங்கள் தவிர பிற துறைகளில் சிறப்பு பயிற்சி, ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது; பஸ் வசதியும் உள்ளது. இத்துடன் கராத்தே, நடனம், இசை, யோகா, குதிரை ஏற்றம், ஸ்கேட்டிங், சிலம்பம் உள்ளிட்டவையும் கற்றுத் தரப் படுகின்றன. மாணவர்களிடத்தில் தலைமைத்துவ மற்றும் கல்வி திறன்களை வளர்ப்பதில் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு பெற்ற மாணவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். விடாமுயற்சி, நேர்மை, உண்மை தன்மை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை