மாநில வாலிபால் போட்டிக்கு அன்னை வயலெட் அணி தகுதி
கோவை: மாநில அளவிலான வாலிபால் போட்டியில் விளையாட, அன்னை வயலெட் அணி தகுதி பெற்றது. கோவை அரசூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பள்ளி கல்வித் துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் இறுதிப் போட்டியில், அன்னை வயலெட் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி அணியும், பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், அன்னை வயலெட் அணி வெற்றி பெற்றது. திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றது.