மேலும் செய்திகள்
அக்னிவீர் பணிகளுக்கான தேர்வு
03-Apr-2025
கோவை: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன் பதிவுக்கான தேதி, 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் சேர்ப்பதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம், ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுகிறது. விண்ணப்பிக்க வரும், 25ம் தேதி கடைசி நாள். www.joinindianarmy.nic.inஎன்ற இணைய தளத்தில் பதிய வேண்டும்.அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி (10ம் வகுப்பு தேர்ச்சி), அக்னி வீர் தொழிலாளி (8ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். இரண்டு பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.இதில், 1.6 கி.மீ., ஓட்ட பரிசோதனைக்கான நேரம், 5 நிமிடம், 45 விநாடியில் இருந்து, 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.என்.சி.சி., ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், டிப்ளமோ முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் உட்பட, 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு நடைபெறும்; பின், ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதி அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், விரைவில் அறிவிக்கப்படும் என, கோயமுத்துார் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா தெரிவித்துள்ளார்.
03-Apr-2025