கொண்டாட்டங்களை தித்திப்பாக்கும் அரோமா
கி றிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2026 கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க, அரோமா தனது விழாக்கால சிறப்பு கலெக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய கேக்குகள் முதல் நவீன பியூஷன் கேக்குகள் வரை எல்லா வயதினரையும் கவரும் வகையில், 100க்கும் மேற்பட்ட கேக் வகைகள், உருவாக்கப்பட்டுள்ளன. கம்பு, ரவா, ஓட்ஸ், இஞ்சி, தேங்காய், சாக்லேட், மில்க் மற்றும் நட், மசாலா, மால்ட் என பிரீமியம் குக்கீஸ், பாரம்பரியம் மற்றும் நவீன உணவு வகைகள் என மைசூர் பாக், லட்டு, காஜு வகைகள், ஸ்நாக்ஸ் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள், ஸ்பெஷல் காரம், ஸ்நாக்ஸ் வகைகள் ஆகியவை கொண்டாட்டங்களுக்கு ஏற்ற முழுமையை அளிக்கிறது. அரோமா குழும நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி பேசுகையில், ''அரோமா என்பது நம்பிக்கையின் சின்னம். பாரம்பரிய சுவை, தரமான மூலப்பொருட்கள் மற்றும் நவீன உணவு தொழில்நுட்பம் ஒவ்வொரு தயாரிப்பிலும் இணைந்து செயல்படுகின்றன,'' என்றார். பண்டிகை காலத்தை மேலும் மகிழ்ச்சியாக்க, குறிப்பிட்ட நாட்களில் கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கூல் டிரிங்க்ஸ் இலவசமாக வழங்கப்படும்; சிறப்பு சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.