மேலும் செய்திகள்
மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நியமனம்
11-Feb-2025
கோவை; கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக, மணிவர்மன் நேற்று பொறுப்பேற்றார். கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன், உதவி கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் திருச்சி, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கவனித்து வந்த உதவி கமிஷனர் பொறுப்புக்கு கோவை, போத்தனுார் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
11-Feb-2025